பிலிப்பைன்சில் கடும் நிலச்சரிவு.. 5 பேர் உயிரிழப்பு


பிலிப்பைன்சில் கடும் நிலச்சரிவு.. 5 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 Feb 2024 11:57 AM IST (Updated: 7 Feb 2024 1:35 PM IST)
t-max-icont-min-icon

சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டன.

மணிலா:

தெற்கு பிலிப்பைன்சின் மலைப் பகுதியில் மழை காரணமாக நேற்று இரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மின்டானோ தீவில் உள்ள ஒரு சுரங்க கிராமத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவினால் சில வீடுகள் சேதமடைந்தன. மேலும் சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகளும் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டன.

இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர், 31 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பேருந்துகளில் சுமார் 20 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

1 More update

Next Story