இலங்கை உள்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அவசியம் - ஐ.நா


இலங்கை உள்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அவசியம் - ஐ.நா
x

இலங்கை, பாகிஸ்தான் உள்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அளிப்பது அவசியம் என்று ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது.

கடன் சுமையில்...

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலக அளவில் எண்ணற்ற வளரும் நாடுகள் கடுமையான கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான நாடுகள், கொரோனா தொடங்குவதற்கு முன்பே கடன் சுமையில் சிக்கி விட்டன.

இந்த ஏழை நாடுகள், பொருளாதார அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. இந்நாடுகள், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. புதிதாக கடன் வாங்கவும் முடியவில்லை.

இலங்கை, பாகிஸ்தான்

இவற்றில் இலங்கை, பாகிஸ்தான், துனிஷியா, சாத், ஜாம்பியா ஆகிய நாடுகள் உடனடி ஆபத்தை சந்திக்கும் நிலையில் உள்ளன. அவை உள்பட 54 நாடுகளுக்கு உடனடியாக கடன் நிவாரணம் அளிப்பது அவசியம்.

அப்படி உடனடி நிவாரணம் கிடைக்காவிட்டால் அங்கு வறுமை அளவு உயரும். இதுபற்றி அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அதனால் அபாயம் உயர்ந்து வருகிறது. இது மற்ற நாடுகளுக்கும் பரவும் அச்சுறுத்தல் உள்ளது.

மேற்கண்ட 54 நாடுகளில் 46 நாடுகள், 2020-ம் ஆண்டு வாங்கிய மொத்த கடன் 782 பில்லியன் டாலர் ஆகும்.


Next Story