உலகமயமாக்கலில் முன்னணியில் இருந்த சீனா தனிமைப்படுத்தப்படும் - அதானி


உலகமயமாக்கலில் முன்னணியில் இருந்த சீனா தனிமைப்படுத்தப்படும் - அதானி
x

அதானி குழுமம் அடுத்த பத்தாண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும்.

சிங்கப்பூர்,

உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான கவுதம் அதானி சிங்கப்பூரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போர்ப்ஸ் குளோபல் சிஇஓக்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

அவர் கூறுகையில்:-

அதானி குழுமம் அடுத்த பத்தாண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும். இந்த முதலீடு முக்கியமாக புதிய ஆற்றல் மற்றும் தரவு மையங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் துறையில் செய்யப்படும்.

இன்று நாங்கள் கிரீன் எலக்ட்ரானின் மிகக் குறைந்த விலை தயாரிப்பாளராக இருக்கிறோம், மேலும் குறைந்த செலவில் பசுமை ஹைட்ரஜனையும் உற்பத்தி செய்வோம்

இந்த முதலீட்டில் 70 சதவீதம் ஆற்றல் மாற்றத்துக்கான துறைகளில் இருக்கும். பசுமை ஹைட்ரஜனால் இந்தியா ஒரு நாள் நிகர எரிசக்தி ஏற்றுமதியாளராக மாறக்கூடும்.

இந்திய தரவு மைய சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தத் துறையானது உலகில் உள்ள வேறு எந்தத் துறையையும் விட அதிக ஆற்றலைப் பயன்படுத்துகிறது, எனவே பசுமை தரவு மையங்களை உருவாக்குவதற்கான எங்கள் நடவடிக்கை மிகப்பெரிய மாற்றமாகும்.

இந்தியா நம்பமுடியாத வாய்ப்புகளால் நிரம்பியுள்ளது. உண்மையான இந்தியாவின் வளர்ச்சியின் கதை இப்போதுதான் ஆரம்பமாகிறது. மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிக அளவில் உயர்த்தி பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளும்.

சீனாவைப் பற்றி கருத்து தெரிவித்த அதானி, ஒரு காலத்தில் உலகமயமாக்கலில் முன்னணியில் இருந்த இந்த நாடு இப்போது சவால்களை எதிர்கொள்கிறது.சீனா தனிமைப்படுத்தப்பட்டதாக உணரும் என்று அவர் கூறினார்.


Next Story