ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது - புதின்

Image Courtacy: ANI
ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது என்று ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.
கஜகஸ்தான்,
கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்று வரும் ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான (CICA) மாநாட்டின் 6வது உச்சிமாநாடு நடைபெற்றது
அதில் பேசிய ரஷிய அதிபர் புதின், "ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அதன் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றின் வளங்களைப் பயன்படுத்தி நாட்டின் நிலைமையை சீராக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் நெருக்கமான ஒத்துழைப்பில் ஈடுபட அனைத்து ஆசிய நாடுகளையும் அவர் அழைத்தார். தொடர்ந்து தலிபான்கள் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை ரஷிய அதிபர் கடுமையாக விமர்சித்தார்.
Related Tags :
Next Story






