ஆப்கானிஸ்தான்: தற்கொலை பயங்கரவாத தாக்குதலில் தலீபான்கள் நியமித்த கவர்னர் படுகொலை


ஆப்கானிஸ்தான்: தற்கொலை பயங்கரவாத தாக்குதலில் தலீபான்கள் நியமித்த கவர்னர் படுகொலை
x

ஆப்கானிஸ்தான் நாட்டில் கவர்னர் அலுவலகத்தில் வைத்து நடந்த தற்கொலை பயங்கரவாத தாக்குதலில் சிக்கி தலீபான்கள் நியமித்த கவர்னர் உயிரிழந்து உள்ளார்.


காபூல்,


ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசாட்சியை தலீபான்கள் 2021-ம் ஆண்டு கைப்பற்றிய பின்னர் பல அரசிய மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்நாட்டின் வடக்கே பால்க் மாகாணத்தின் கவர்னராக முகமது தாவூத் முசாமில் என்பவர் தலீபான்களால் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை 2-வது தளத்தில் இருந்த கவர்னர் அலுவலகத்தில் முகமது தாவூத் தனது பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, வெடிகுண்டுகளை உடலில் கட்டு கொண்டு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அதனை வெடிக்க செய்து உள்ளார்.

இந்த தற்கொலை பயங்கரவாத தாக்குதலில் சிக்கி பால்க் கவர்னர் முகமது தாவூத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். அவருடன் பொதுமக்களில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர, ராணுவத்தினர் 3 பேர் மற்றும் குடிமக்களில் ஒருவர் என 4 பேர் காயமடைந்தனர். இதனை பால்க் பாதுகாப்பு துறைக்கு நியமிக்கப்பட்ட செய்தி தொடர்பாளர் முகமது ஆசிப் வசீரி உறுதிப்படுத்தி உள்ளார்.

அமெரிக்க படைகள் வாபசுக்கு பின்னர் தலீபான்கள் கைப்படியில் நாடு சென்றதும், ஐ.எஸ். பயங்கரவாத குழுவினர் மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் அந்நாட்டில் பொதுமக்கள் மற்றும் தலீபான் உறுப்பினர்கள் மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story