ஆ...வென வாயை பிளக்க வைக்கும் சம்பளம்...!! ஆனால் மனித கழிவுகளை மோப்பம் பிடிக்கும் மூக்கு வேண்டும்


ஆ...வென வாயை பிளக்க வைக்கும் சம்பளம்...!! ஆனால் மனித கழிவுகளை மோப்பம் பிடிக்கும் மூக்கு வேண்டும்
x

18 வயது பூர்த்தியான, அதிக மோப்ப சக்தி கொண்டவரா...? அப்படி என்றால் மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் உங்களுக்கான வேலை இங்கிலாந்தில் காத்திருக்கிறது.



லண்டன்,


இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு பீல் கம்பிளீட் (Feel Complete) என்ற பெயரிலான ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் தனது வலைதள பக்கத்தில் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளது.

இதில் என்ன விசயம் என்றால்... 18 வயது பூர்த்தியான நபர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கவும். வருகிற மார்ச் முதல் 6 மாத கால பயிற்சி கொடுக்கப்படும். பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.1.5 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்து விட்டு, அவர்களுக்கு முக்கிய தகுதியாக, தீவிர மோப்பம் பிடிக்கும் சக்தி இருக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளது.

அப்படி என்ன வேலையென்றால், மனித கழிவுகளை சிறந்த முறையில் மோப்பம் பிடிக்க வேண்டும். இதற்கான பயிற்சியை அவர்களுக்கு நிறுவனமே வழங்கும். அப்படி சிறந்த முறையில் மனித மலம் பற்றி மோப்பம் பிடித்து வல்லுனராக வரும் பூமெலியர் ஒருவரை நிறுவனம் தேர்ந்தெடுத்து, அதற்கான வேலையில் அந்நபரை சேர்த்து கொள்ளும்.

ஒரு நபரின் பொது சுகாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றை அடையாளம் காட்டும் விசயங்களில் ஒன்றாக அவரது மனித கழிவுகள் உள்ளன. அதனை பார்த்து, மோப்பம் பிடித்து, வல்லுனராக்க பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 5 பேரை அந்நிறுவனம் தேடி கொண்டிருக்கிறது.

இந்த பயிற்சி திட்டத்தில், அனைத்து நிலையிலான குடல் சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவை இடம் பெறுவதுடன், வேலைக்காக மோப்பம் பிடிக்கும் சிறந்த மூக்கு கொண்ட நபரையும் தேர்வு செய்ய உள்ளது.

குடல் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் உணவு செரிப்பதில் ஏற்படும் ஒழுங்கற்ற நிலைக்கான ஒரு பெரிய காரணியாக அங்கீகரிக்கப்படுகிறது. அதனால், மனித கழிவின் வடிவம், வாடை, வண்ணம், அமைப்பு மற்றும் சீராக வெளிவருதல் ஆகியவற்றில் காணப்படும் பெரிய அளவிலான வேற்றுமைகள் ஆனது, தொற்று அல்லது ரத்தம் வருதல் போன்ற பல்வேறு சுகாதார நிலைமைகளுக்கான அடையாளங்களாக கொள்ளப்படுகின்றன.

இதுபற்றி முன்னணி ஊட்டச்சத்து நிபுணர் ஹன்னா மேசீ கூறும்போது, யாரொருவரின் கழிவுகளும் நல்ல மணம் வீசாது. சில வெறுக்கத்தக்க மணம் கொண்ட மனித கழிவுகள் மற்றும் வேறு சில தோற்றம் கொண்டவை, குடல் சார்ந்த சுகாதார பாதிப்புக்கான அடையாளங்களாக கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில், என்ன நோய் பாதிப்பு என உறுதியாக கூற முடியும் என அந்நிறுவனம் எண்ணுகிறது என கூறியுள்ளார். என்ன அந்த வேலைக்கு தயாராகி விட்டீர்களா?


Next Story