அடுத்த சில வாரங்களில் அமேசானில் மேலும் 9 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்

டுவிட்டர், பேஸ்புக், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
அடுத்த சில வாரங்களில் அமேசானில் மேலும் 9 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்
Published on

நியூயார்க், 

டுவிட்டர், பேஸ்புக், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் ஏற்கனவே 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தது.

இதன் தொடர்ச்சியாக மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை அடுத்த சில வாரங்களில் பணிநீக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாசி, ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளார். இந்த பணிநீக்க நடவடிக்கை அமேசான் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com