காலத்தினால் செய்த உதவி...! சேற்றில் சிக்கிய குட்டி யானை: மீண்டு வர உதவிய சிறுமி...தும்பிக்கையால் நன்றி கூறிய குட்டியானை..!

வனவிலங்கு பூங்காவில் இருந்து வழி தவறி வந்த குட்டி யானை . சாலை ஓரத்தில் இருந்த சேற்றில் சிக்கியது. அதற்கு உதவிய சிறுமியை தனது தும்பிக்கையால் நன்றி தெரிவித்தது.
தாய்லாந்தில் சாலை ஓரத்தில் ஆழமான சேற்றில் சிக்கிய குட்டி யானையை பெயர் தெரியாத பெண் ஒருவர் அந்த வழியாக வந்துள்ளார். அப்போது குட்டியானை சேற்றில் சிக்கி தவித்து வருவதை கண்ட அவர் யானைக்கு உதவியுள்ளார். குட்டி யானை சேற்றில் சிக்கி வெளியே வந்தது. அவருக்கு தும்பிக்கையால் தனது நன்றியை தெரிவித்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
யானையின் பெயர் சுபன்ஷா தனது உள்ளூர் சரணாலயத்திலிருந்து அலைந்து திரிந்ததால், அந்த இடத்தில் சிக்கிக்கொண்டது. அந்தப் பெண்ணின் செயல்களுக்கு நன்றி, குட்டி யானை பாதுகாப்பாக தனது முகாமுக்குத் திரும்பியது.
"இந்த ஜம்போ சேற்றில் விளையாடுவதை மிகவும் விரும்பி உள்ளார், ஆனால் அந்த சேறு அவருக்கு மிகவும் ஆழமாக இருந்தது" என்று அதன் பராமரிப்பாளர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story