சிங்கப்பூரில் 'ஆசிய சிந்தனை மன்றக் கூட்டம்' - இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சிந்தனைக் குழு நிபுணர்கள் பங்கேற்பு


சிங்கப்பூரில் ஆசிய சிந்தனை மன்றக் கூட்டம் - இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சிந்தனைக் குழு நிபுணர்கள் பங்கேற்பு
x

ஆசிய சிந்தனை மன்றக் கூட்டத்தில் சீனா, இந்தியா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளின் சிந்தனைக் குழு நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் 'ஆசிய சிந்தனை மன்றக் கூட்டம்' நடைபெற்றது. இந்த கூட்டம் 'புதிய சகாப்தத்தில் ஆசியா மற்றும் உலகம்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி நிறுவனம், சிங்குவா பல்கலைக்கழகத்தின் தற்கால சீனா மற்றும் உலக ஆய்வுக் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த கூட்டத்தில் சீனா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் பிற ஆசிய நாடுகளின் சிந்தனைக் குழு நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஆசிய நவீனமயமாக்கலில் உள்ள சவால்கள், உலகளாவிய பொருளாதார மீட்பு, ஆசியாவில் பிராந்திய ஒத்துழைப்பு, ஆசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.

ஆசிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளதால், இதற்கு 'ஆசிய சிந்தனை மன்றம்' என பெயரிடப்பட்டுள்ளதாக சிங்குவா பல்கலைக்கழகத்தின் தற்கால சீனா மற்றும் உலக ஆய்வுக் கழக தலைவர் யூயான் சான் தெரிவித்துள்ளார்.


Next Story