பஸ் - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர தீ விபத்து - 15 பேர் உடல் கருகி பலி


பஸ் - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர தீ விபத்து - 15 பேர் உடல் கருகி பலி
x

பஸ் - கார் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. இந்நிலையில், அந்நாட்டின் தென்கிழக்கே உள்ள ஒயோ மாகாணத்தின் இபரபா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, சாலையில் மறுபுறம் வேகமாக வந்த கார் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரும், பஸ்சும் தீ பிடித்து எரிந்தது. தீ மளமளவென எரிந்ததால் கார் மற்றும் பஸ்சுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த கார் - பஸ் விபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story