துணி துவைத்து கொண்டிருந்தபோது திடீர் நிலச்சரிவு: 20 பேர் பலி


துணி துவைத்து  கொண்டிருந்தபோது திடீர் நிலச்சரிவு: 20 பேர் பலி
x
தினத்தந்தி 4 April 2023 10:41 AM GMT (Updated: 4 April 2023 11:18 AM GMT)

காங்கோ நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.

கொமா,

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் மசிசி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாகாணத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ள பொலொவா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

மலைப்பகுதி அருகே உள்ள நீரோடையில் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் துணி துவைத்துக்கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் பெண்கள் குழந்தைகள் என மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மண்ணுக்குள் புதைந்தவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story