ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!


ஆஸ்திரேலியா: விக்டோரியாவில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
x

Image Credit:www.abc.net.au

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மெல்போர்ன்,

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில், கடந்த இரண்டு வருடங்களில் பலத்த மழையால் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் தெருக்களில் விடப்பட்ட கார்கள் வெள்ளத்தால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டன.

விக்டோரியாவில் 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் 500 வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு அவசரகால சேவைகள் துண்டிக்கப்பட்டன. கனமழையால் சுமார் 120 சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று மீட்புக் குழுவினர் கூறினர்.டாஸ்மானியா பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சேதத்தை மதிப்பிடவும் மீட்பு பணியிலும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.ஆஸ்திரேலிய ராணுவமும் விக்டோரியாவில் களமிறக்கப்பட்டுள்ளது.மிதவை படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சில பகுதிகளில் வெள்ள நீர் வருவதற்கு முன்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் மணல் மூட்டைகளை மூடுவதற்கு ராணுவம் உதவியது. விக்டோரியா மாநிலத்திற்கு இது ஒரு மிகப்பெரிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1,000 பேர் தங்கும் வசதி கொண்ட கொரோனா தனிமைப்படுத்தல் மையம் ஒன்று மக்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Next Story