வங்காளதேசத்தில் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க சென்ற பக்தர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி! பலர் மாயம்!!

கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்ததில் 24 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வங்காளதேசத்தில் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க சென்ற பக்தர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி! பலர் மாயம்!!
Published on

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஞாயிறு மதியம் கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 24 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க ஆலியா காட்டில் இருந்து பாதேஷ்வர் கோவிலை நோக்கி பிரார்த்தனை செய்ய சென்று கொண்டிருந்தனர். அப்போது அவுலியார் காட் பகுதியில் இந்த விபத்து நடந்தது.

அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் 30க்கும் அதிகமானோர் மாயமாகி இருப்பதாகவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அதிகம் என்று போலீசார் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com