ஐ.நா. பருவ நிலை மாற்ற உச்சி மாநாடு: எகிப்து செல்லும் ஜோ பைடன்


ஐ.நா. பருவ நிலை மாற்ற உச்சி மாநாடு: எகிப்து செல்லும் ஜோ பைடன்
x

ஐ.நா. பருவ நிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எகிப்து செல்கிறார்.

வாஷிங்டன்,

அடுத்த மாதம் எகிப்தில் இடம்பெறவுள்ள COP27 எனும் அனைத்துலகப் பருவநிலை மாற்ற மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ளவிருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐ.நா. பருவ நிலை மாற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் (நவம்பர்) எகிப்து செல்ல இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எகிப்து பயணத்தை முடித்துக்கொண்டு அவர் காம்போடியா, இந்தோனேசியா நாடுகளுக்கும் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தை மேம்படுத்துவதோடு, எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் பருவநிலை மாற்றுத்துக்கு எதிரான மீள்திறனை வளர்த்துக்கொள்ள ஜோ பைடன் உதவுவார் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக உச்சி மாநாட்டில் "பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கையின் தேவையை" எடுத்துரைக்க இருப்பதாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.


Next Story