கொலம்பியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து..! 20 பேர் உயிரிழந்த சோகம்


கொலம்பியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து..! 20 பேர் உயிரிழந்த சோகம்
x

image credit: AFP

தினத்தந்தி 16 Oct 2022 6:00 AM IST (Updated: 16 Oct 2022 6:16 AM IST)
t-max-icont-min-icon

கொலம்பியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டுமாகோ,

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், படுகாயமடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, விபத்து நடந்த பகுதி பனிமூட்டமான மற்றும் வளைவுகள் உள்ள பகுதி என்பதால், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

கவிந்த பேருந்தை நிமிர்த்தவும், பேருந்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு 9 மணி நேரம் ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story