தென்கொரியா: ஹாலோவீன் திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!


தென்கொரியா: ஹாலோவீன் திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!
x

Image Credit:AFP

உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி ஊர்வலம் நடத்தினர்.

சியோல்,

தென்கொரிய தலைநகர் சியோல் நகரில் இடாயிவொன் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஹாலோவீன் திருவிழா மிகவும் பிரபலம். இறந்தவர்களை மகிழ்விப்பதாக கருதி இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி ஹாலோவீன் எனும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி, சி்யோலின் இடோவான் என்ற இடத்தில் பிரபல சந்தைப் பகுதியில் நடைபெற்ற விழாவில், சுமார் ஒரு லட்சம் பேர் கூடியிருந்தனர்.

விழா நடந்த இடம் வெறும் 13 அடி அகலமே கொண்ட சிறிய பகுதி என்பதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், பொதுமக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டே நடந்து சென்றனர். ஒருகட்டத்தில் கூட்ட நெரிசல் எல்லை மீறியதால், பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி 156 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு மக்கள் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

இதில் பங்கேற்றவர்கள் 'விபத்திற்கு அதிபர் பொறுப்பேற்க வேண்டும்' என்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.விபத்திற்கு பொறுப்பேற்று அதிபர் யுன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நகரின் உட்கட்டமைப்பு போதுமான அளவு மேம்படுத்தப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story