பள்ளி மினி வேன் மீது லாரி மோதி விபத்து; 19 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி


பள்ளி மினி வேன் மீது லாரி மோதி விபத்து; 19 குழந்தைகள் உள்பட 21 பேர் பலி
x

பள்ளி வகுப்புகள் முடிந்ததும் குழந்தைகள் மினி வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

ஜொகனர்ஸ்பெர்க்,

தென்னாப்பிரிக்கா நாட்டின் குவாஸ்லு - நடால் மாகாணத்தில் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வகுப்பை நிறைவு செய்துவிட்டு நேற்று மாலை குழந்தைகள் பள்ளி மின் வேனில் வீட்டிற்கு புறப்பட்டனர்.

மின்வேனில் 19 குழந்தைகள், வேன் டிரைவர், உதவியாளர் என 21 பேர் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பள்ளி வாகனம் மீது சாலையின் எதிரே வந்த சரக்கு லாரி வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் மினிவேனில் பயணம் செய்த 19 குழந்தைகள் உள்பட 21 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story