ஹூவாய் நிறுவனத்தின் மீதான வழக்கு - சீன நாட்டவர்கள் மீது அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு


ஹூவாய் நிறுவனத்தின் மீதான வழக்கு - சீன நாட்டவர்கள் மீது அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு
x

ஹூவாய் நிறுவனத்தின் மீதான வழக்கில் சீன நாட்டவர்கள் மீது அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

வாஷிங்டன்,

சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வழக்கு விசாரணையில் தலையிட முயன்றதாக சீன நாட்டவர்களான குவோசுன் ஹீ மற்றும் ஜெங் வாங் ஆகியோர் மீது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். நீதிமன்ற ஆவணங்கள் நிறுவனத்தின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அவர்கள் ஹூவாய் மீதான வழக்கு விசாரணையில் தலையிட முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

எச்.எஸ்.பி.சி (HSBC) மற்றும் பிற வங்கிகளை ஈரானில் அதன் வணிகம் குறித்து தவறாக வழிநடத்தியதாக 2018 இல் ஹூவாய் (Huawei) நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்த வழக்கில் புகார் அளித்தவர்கள், சாட்சிகள், விசாரணை ஆதாரங்கள் மற்றும் நிறுவனம் எதிர்கொள்ளக்கூடிய புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பான ரகசிய தகவல்களைப் பெற முயன்றதாகக் இந்த 2 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.


Next Story