சிலியில் மனிதர் ஒருவருக்கு முதல் முறையாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு


சிலியில் மனிதர் ஒருவருக்கு முதல் முறையாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு
x

(Credits: Reuters)

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்,பறவைகளுக்கு மட்டுமமே பரவிய பறவை காய்ச்சல் தற்போது மனிதருக்கும் ஏற்பட்டுள்ளது

நோய்த்தொற்றின் காரணத்தை கண்டறியவும், நோயாளியுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை அடையாளம் காணவும் சிலி நாட்டு அரசாங்கம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது . கடந்த வாரத்தில் சிலி நாட்டில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கோழி ஏற்றுமதியையும் அந்த நாடு நிறுத்தி வைத்துள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஈகுவடார் நாட்டை சேர்ந்த 9-வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. மனிதனில் இருந்து மனிதனுக்கு பறவைக்காய்ச்சல் பரவும் வாய்ப்பு குறைவு என்றாலும் மனிதனுக்கு ஏற்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.


Next Story