சாதாரண குடிமகன் உள்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பிய சீனா

சீனாவில் முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.
சாதாரண குடிமகன் உள்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பிய சீனா
Published on

பீஜிங்,

ரஷியா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். இதற்காக விண்வெளி துறையில் சீனா கோடிக்கணக்கில் முதலீடு செய்து உள்ளது.

அந்தவகையில் 400 கி.மீ. உயரத்தில் உள்ள தனது விண்வெளி நிலையமான தியான்ஹேவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா முடிவு செய்தது. அதன்படி சீனாவின் ஜியுகுவான் செயற்கை கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை ஷென்சோ-16 என்ற செயற்கை கோள் அனுப்பப்பட்டது. இது சீனாவின் 4-வது மனித விண்வெளி பயணம் ஆகும். ஆனால் இந்த முறை முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

இந்த ஷென்சோ-16 என்ற செயற்கை கோளானது 10 நிமிடம் கழித்து ராக்கெட்டில் இருந்து பிரிந்து சுற்றுப்பாதையில் நுழைந்தது. செயற்கைகோள் ஏவுதல் பணி முழு வெற்றி பெற்றதாகவும், அதில் உள்ள 3 பேரும் நல்ல நிலையில் உள்ளதாகவும் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 3 பேரும் 5 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வு பணி மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com