அண்டார்டிகாவில் புதிய ஆய்வு தளம் அமைக்க சீனா திட்டம்


அண்டார்டிகாவில் புதிய ஆய்வு தளம் அமைக்க சீனா திட்டம்
x

அண்டார்டிகாவில் ஆய்வு தளம் கட்டுமான பணிக்காக 80 சீன மையங்களை சேர்ந்த 460 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சரக்கு கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது.

பீஜிங்,

அண்டார்டிகாவில் புதிய ஆராய்ச்சி மையம் ஒன்றை கட்டியெழுப்ப சீனா திட்டமிட்டு உள்ளது. ராஸ் கடலின் கடலோர பகுதியில் 5-வது ஆராய்ச்சி மையத்திற்கான கட்டுமான பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பணியை வருகிற 2024-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் நிறைவு செய்வது என சீனா திட்டமிட்டு இருக்கிறது. இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதற்காக 80 சீன மையங்களை சேர்ந்த 460 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் அடங்கிய சரக்கு கப்பல் ஒன்றும் செல்ல இருக்கிறது.

இந்த கட்டுமான பணியுடன் கூட, அண்டார்டிகாவின் சுற்றுச்சூழலில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட கூடிய பாதிப்பு பற்றி ஆராய்ச்சி குழு ஆய்வு மேற்கொள்ளும்.

இதேபோன்று, உலகளாவிய பருவநிலை மாற்றத்தில் இந்த பகுதியின் பங்கு பற்றியும் ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு அண்டார்டிகாவில் அமையுவுள்ள புதிய தளத்துடன், செயற்கைக்கோள் நிலையம் ஒன்றும் மற்றும் கண்காணிப்பகமும் அமைக்கப்படும்.


Next Story