ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து


ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து
x

Image Courtesy : AFP 

இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முர்முவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்,

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். திரவுபதி முர்முவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், "சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான அண்டை நாடுகள் . ஆரோக்கியமான சீனா-இந்தியா உறவு இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு ஏற்ப, அமைதிக்கு உகந்த வகையில் உள்ளது.

அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், வேறுபாடுகளை சரியாகக் கையாளவும், இருதரப்பு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்லவும் ஜனாதிபதி முர்முவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story