செல்போனில் இருந்து 'டிக்-டாக்' செயலியை நீக்குங்கள்; டென்மார்க் எம்.பி.க்களுக்கு நாடாளுமன்றம் வலியுறுத்தல்


செல்போனில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்குங்கள்; டென்மார்க் எம்.பி.க்களுக்கு நாடாளுமன்றம் வலியுறுத்தல்
x

டென்மார்க் நாடாளுமன்றம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் செல்போனில் இருந்து ‘டிக்-டாக்’ செயலியை நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் 'டிக்-டாக்' செயலியால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அந்த செயலியை முழுமையாக தடை செய்துள்ளன.

அதே போல் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அரசு ஊழியர்கள் 'டிக்-டாக்' செயலியை பயன்படுத்தவும், அரசின் மின்னணு சாதனங்களில் 'டிக்-டாக்' செயலியை பதிவிறக்கம் செய்யவும் தடைவிதித்துள்ளன.

அந்த வரிசையில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் 179 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் செல்போனில் இருந்து 'டிக்-டாக்' செயலியை நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து டென்மார்க் நாடாளுமன்ற சபாநாயகர் சோரன் கேட் கூறுகையில், "நீங்கள், 'டிக்-டாக்' செயலியை அலுவலக பயன்பாட்டுக்கான செல்போனில் பதிவிறக்கம் செய்திருந்தால் அதை நீக்கிவிடுங்கள் என்ற வலுவான பரிந்துரையுடன் எம்.பி.க்கள் மற்றும் ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்.


Next Story