துருக்கியில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் உயிரிழப்பு 40 ஆக உயர்வு


துருக்கியில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் உயிரிழப்பு 40 ஆக உயர்வு
x

துருக்கி நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு 40 ஆக உயர்ந்து உள்ளது என அந்நாட்டு உள்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.



இஸ்தான்புல்,



துருக்கி நாட்டின் வடக்கே பார்தின் மாகாணத்தில் அமாஸ்ரா நகரில் அமைந்த நிலக்கரி சுரங்கம் ஒன்றில் திடீரென நேற்று வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுபற்றி துருக்கி உள்துறை மந்திரி சுலேமான் சொய்லு இன்று கூறும்போது, இதுவரை நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 40 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. 58 சுரங்க தொழிலாளர்கள் அவர்களாகவே தப்பி வெளியேறி வந்துள்ளனர் என கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் துருக்கியில் ஏற்பட்ட கடுமையான தொழில் சார்ந்த வெடிவிபத்து இதுவாகும். இதுபற்றி அந்நாட்டின் ஆற்றல் துறை மந்திரி பதீ டோன்மெஜ் கூறும்போது, மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் முடிவை நெருங்கி வருகிறோம் என வேதனையுடன் கூறியுள்ளார்.


Next Story