காங்கோவில் சீனத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 2 கர்னல்கள் உட்பட 6 பேருக்கு மரண தண்டனை..!


காங்கோவில் சீனத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 2 கர்னல்கள் உட்பட 6 பேருக்கு மரண தண்டனை..!
x

காங்கோவில் சீனத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 2 கர்னல்கள் உட்பட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கின்ஷாசா (காங்கோ),

காங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த மார்ச் மாதம் 2 சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 2 ராணுவ கர்னல்கள் உட்பட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ராணுவ வீரர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இடூரி ராணுவ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

மரண தண்டனை பெற்றவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.

தங்கச் சுரங்கத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த தொழிலாளர்களிடமிருந்து நான்கு தங்கக் கட்டிகள் மற்றும் 6 ஆயிரம் டாலர் மதிப்புள்ள ரொக்கம் ஆகியவற்றைத் திருடும் நோக்கத்துடன் கான்வாய் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 2 கர்னல்களும் குற்றம் சாட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதப் படைகளில் உள்ள கறுப்பு ஆடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று இடூரி மாகாணத்தில் இராணுவ நடவடிக்கைகளின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜூல்ஸ் கூறியுள்ளார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.


Next Story