ரெட் புல் குளிர்பான நிறுவனத்தின் உரிமையாளர் டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் காலமானார்


ரெட் புல் குளிர்பான நிறுவனத்தின் உரிமையாளர் டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ்  காலமானார்
x

ரெட் புல் நிறுவனத்தின் உரிமையாளரான டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் தனது 78வது வயதில் காலமானார்.

ஆஸ்திரியா,

குளிர்பான நிறுவனமான ரெட் புல்லின் இணை நிறுவனரும் உரிமையாளருமான டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் புற்றுநோயால் உயிரிழந்தார். இதனை ரெட் புல் பார்முலா ஒன் குழு உறுதிப் படுத்தியுள்ளது.

1980களின் மத்திய பகுதியில் ரெட் புல்லை நிறுவிய அவர், அதை சந்தையில் முன்னணிக்கு கொண்டு வந்ததுடன், அதே சமயம் விளையாட்டுகளின் மூலம் இந்த பிராண்டைக் காட்சிப்படுத்தினார். டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story