உயிர் போற நேரத்துல செல்பி தேவையா..? பெரு தம்பதியின் வைரல் பதிவு


உயிர் போற நேரத்துல செல்பி தேவையா..? பெரு தம்பதியின் வைரல் பதிவு
x

பெருவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பெரு,

உயிரே போனாலும் செல்பி எடுக்காமல் வரமாட்டோம் என்ற அளவுக்கு ஒரு செல்பியை எடுத்து வைரலாக்கியுள்ளனர் பெருவை சேர்ந்த ஆசிரியரும், அவரது மனைவியும்..

கடந்த 19ம் தேதியன்று தென் அமெரிக்காவில் உள்ள பெருவின் லிமா நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையில் தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், தீயணைப்பு வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி ஒருவர், விபத்துக்குள்ளான விமானம் முன்பு நின்று, தங்களுக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை என்பதை கொண்டாடும் விதமாக சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அதனை இணையத்தில் பதிவிட்டனர்.

மேலும் அதில், வாழ்க்கை தங்களுக்கு இரண்டாம் வாய்ப்பை வழங்கியுள்ளது என பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் மனதை வென்ற இந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story