ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபாசியாபத் அருகே காலை 10.10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

பாய்சாபாத்தில் இருந்து 265 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்தநிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு, உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

துருக்கி-சிரியா, இந்தோனேசியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com