டுவிட்டரின் லோகோவாக மீண்டும் குருவியை மாற்றிய எலான் மஸ்க்..!

டுவிட்டரின் லோகோவாக மீண்டும் குருவியை எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
டுவிட்டரின் லோகோவாக மீண்டும் குருவியை மாற்றிய எலான் மஸ்க்..!
Published on

வாஷிங்டன்,

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை கடந்த 4-ம் தேதி எலான் மஸ்க் திடீரென மாற்றினார். "நீல நிற குருவிக்கு பதில் நாய்" லோகோவாக மாற்றப்பட்டது. ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டது.

இந்நிலையில் டுவிட்டரின் லோகாவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியை உரிமையாளரான எலான் மஸ்க் மாற்றியுள்ளார். இது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் Dogecoin கிரிப்போ கரன்ஸியின் லோகோவாக இருந்த நாய் படத்தை எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com