உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியின் வெற்றியை கொண்டாடிய அதிபர் மேக்ரான்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி கால்இறுதிக்குள் நுழைந்தது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியின் வெற்றியை கொண்டாடிய அதிபர் மேக்ரான்!
Published on

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி கால்இறுதிக்குள் நுழைந்தது.

பிரான்சின் ஒலிவியர் ஜிரூட் கோல் 44-வது நிமிடத்தில் அடித்து கணக்கை தொடங்கி வைத்தார். களத்தில் பம்பரமாக சுழன்று வந்த எம்பாப்வே 74-வது நிமிடத்திலும், 90-வது நிமிடத்திலும் பிரமாதமான ஷாட்டுகள் மூலம் கோல் போட்டு எதிரணியை திக்குமுக்காட வைத்தார். இதனால் போலந்தை 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி பந்தாடியது.

இந்த நிலையில், பிரான்சின் வெற்றியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கொண்டாடினார். அவர் தனது டுவிட்டரில், பிரான்ஸ் வீரர்கள் கைலியன் எம்பாப்பே மற்றும் ஒலிவியர் ஜிரூட் படங்களை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com