பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல்


பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல்
x

பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

கோபென்ஹாகென்,

உலக அளவில் 72 நாடுகளில் குரங்கு அம்மை நோயால் கிட்டதட்ட 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து இந்நோயை உலக சுகாதார நிறுவனம் பொது அவசர நிலையாக அறிவித்தது.

பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. டென்மார்க்கை சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி குரங்கு அம்மை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தால் இமான்வேக்ஸ் தடுப்பூசி பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது குரங்கு அம்மை மற்றும் பெரியம்மை ஆகிய இரு நோய்களுக்கும் இதனை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நோய்களை உண்டாக்கும் வைரஸ்கள் இடையே பொதுவான குணாதிசயங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் என காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி ஆகிய அறிகுறிகள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இருக்கும். மேலும் உடலில் புண்கள் ஏற்படும், முகம், கை, கால்கள் போன்ற பகுதிகளில் புள்ளிகள், புண்கள் ஏற்படும்.குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும், அவர்களுடன் பொருட்களை பகிர்ந்துகொள்பவர்களுக்கும் இந்நோய் தொற்றக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

வெளியாட்கள் வந்து சென்ற பிறகு அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும், முககவசம் அணிய வேண்டும், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.


Next Story