பணியிடத்தில் தலையில் முக்காடு அணிவதை நிறுவனங்கள் தடை செய்யலாம்- ஐரோப்பா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


பணியிடத்தில் தலையில் முக்காடு அணிவதை நிறுவனங்கள் தடை செய்யலாம்- ஐரோப்பா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x

Image Courtesy: AFP (Representative Image)

பணியிடத்தில் பெண்கள் தலையில் முக்காடு அணிவதை நிறுவனங்கள் தடை செய்யலாம் என ஐரோப்பாவின் ஐகோர்ட்டு தீர்ப்பை வழங்கியுள்ளது.

பெல்ஜியம்,

ஐரோப்பாவில் பணியிடத்தில் பெண்கள் தலையில் முக்காடு அணிவதை நிறுவனங்கள் தடை செய்யலாம் என ஐரோப்பாவின் ஐகோர்ட்டு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

பெல்ஜியத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் இஸ்லாமிய பெண் ஒருவர் ஆறு வார வேலை பயிற்சிக்கு விண்ணப்பித்தபோது, அவர் ​​தலையில் முக்காடு அணிந்து வர கூடாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கு ஐரோப்பா கோர்ட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தான் ஐரோப்பிய ஐகோர்ட்டு இன்று இந்த பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. ஊழியர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டாத தடையாக இருக்கும் வரை ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் முக்காடு அணிவதை தடை செய்யலாம் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

பணியாளர்கள் அனைவரையும் நடுநிலையாக ஆடை அணிய செய்ய, நிறுவனத்தின் உள்ளக விதிகளின் அடிப்படையில் இந்த தடை அமைந்திருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஐகோர்ட்டு கூறியுள்ளது.

ஏற்கனவே ஜெர்மனியில், பணியிடத்தில் பெண்களுக்கு முக்காடு போடும் தடை சர்ச்சைக்குரியதாக உள்ள நிலையில் தற்போது ஐரோப்பிய ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story