தொற்று ஆதிக்கம் செலுத்துகிற சீனாவுக்கு கொரோனா தடுப்பூசி உதவி ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவிப்பு

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. உருமாறிய பிஎப்.7 கொரோனா அங்கு ஆதிக்கம் செலுத்துகிறது.
தொற்று ஆதிக்கம் செலுத்துகிற சீனாவுக்கு கொரோனா தடுப்பூசி உதவி ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவிப்பு
Published on

மாஸ்கோ,

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. உருமாறிய பிஎப்.7 கொரோனா அங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. சீனத் தடுப்பூசிகளின் திறன் குறித்து சந்தேகம் நிலவுகிறது.

இந்த நிலையில், சீனாவுக்கு இலவசமாக தடுப்பூசிகள் தந்து உதவுவதற்கு தயார் என ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் கூறும்போது, " சீனாவுக்கு பொது சுகாதார நிபுணத்துவம் மற்றும் இலவச தடுப்பூசிகளை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு தயாராக உள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு சுகாதார கமிஷனர் ஸ்டெல்லா கிரியாகைட்ஸ், சீன சுகாதார கமிஷனருக்கு தெரிவித்து இருக்கிறார்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com