ரஷியாவில் எரிவாயு பைப்லைனில் வெடிப்பு: 3 பேர் பலி

ரஷியாவில் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் பைப்லைனில் வெடிப்பு ஏற்பட்டது.
ரஷியாவில் எரிவாயு பைப்லைனில் வெடிப்பு: 3 பேர் பலி
Published on

மாஸ்கோ,

ரஷியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் பைப்லைனில் வெடித்து சிதறியது. எரிவாயு பைப்லைன் வெடித்ததில் 3 பேர் பலியாகினர். பைப்லைனில் வெடிப்பு ஏற்பட்ட போதும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் பாதிப்பு எதுவும் இல்லை என்று ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியாவின் சுவஷியா பிராந்தியத்தில் உள்ள பைப்லைனில் பழுது பார்க்கும் பணி நடைபெற்ற போது இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com