உலகளவில் ஆப்பிரிக்காவை தவிர்த்து குரங்கு அம்மையால் முதல்முறையாக ஒருவர் உயிரிழப்பு!


உலகளவில் ஆப்பிரிக்காவை தவிர்த்து குரங்கு அம்மையால் முதல்முறையாக ஒருவர் உயிரிழப்பு!
x

ஆப்பிரிக்காவை தவிர்த்து, உலகின் பிற பகுதிகளில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை.

ரியோ டி ஜெனிரோ,

கொரோனா பெருந்தொற்றை போல உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாக இருப்பதால், குரங்கு அம்மை வைரஸ் நோய் உலகளாவிய பொதுசுகாதார அவசரநிலையாக கடந்த சனிக்கிழமையன்று உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.

பிரேசிலில் சுமார் ஆயிரம் பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரேசிலில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 41 வயதான நபர், கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன் மூலம், குரங்கு அம்மை முதன்முதலில் அதிகம் பேரிடம் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்காவை தவிர்த்து, உலகின் பிற பகுதிகளில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை.

உயிரிழந்தவருக்கு தீவிர நோயெதிர்ப்பு சக்தி பாதிப்பு இருந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆப்பிரிக்காவை தவிர்த்து உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் 78 நாடுகளில் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story