கலிபோர்னியாவில் முதல் முறையாக நகர மேயர் பதவிக்கு சீக்கியர் தேர்வு


கலிபோர்னியாவில் முதல் முறையாக நகர மேயர் பதவிக்கு சீக்கியர் தேர்வு
x

லோடி நகரத்தின் 117-வது மேயராக மைக்கி ஹோத்தி என்ற சீக்கியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லோடி நகரத்தின் 117-வது மேயராக மைக்கி ஹோத்தி என்ற சீக்கியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவை பூர்வீகத்தைக் கொண்டவர் ஆவார். இவரது பெற்றோர் அந்த நகரின் ஆம்ஸ்ட்ராங் சாலையில் உள்ள சீக்கிய கோவிலை நிர்மாணிக்கும் பணியில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

இந்நிலையில் கலிபோர்னியாவில் நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் சீக்கியர் என்ற பெருமையை மைக்கி ஹோத்தி பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு வரை துணை மேயராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story