3 நாட்களில் 11 முறை ஓட்டெடுப்பு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி 163 ஆண்டுகளில் முதல் முறை


3 நாட்களில் 11 முறை ஓட்டெடுப்பு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி 163 ஆண்டுகளில் முதல் முறை
x
தினத்தந்தி 7 Jan 2023 3:45 AM IST (Updated: 7 Jan 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் 20 பேர் கெவின் மெக்கார்த்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 435 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சி 222 இடங்களையும், ஜனநாயக கட்சி 212 இடங்களையும் கைப்பற்றியது. இதன் மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது. அதை தொடர்ந்து பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக இருந்து வந்த ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி பதவி விலகினார். இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றம் கூடியது. தொடர்ந்து, பிரதிநிதிகள் சபைக்கான புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. இதில் குடியரசு கட்சியின் சார்பில் அக்கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவர் கெவின் மெக்கார்த்தி போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் ஹக்கீம் ஜெப்ரிஸ் களம் இறங்கினார்.

சபாநாயகரை தேர்வு செய்ய 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. குடியரசு கட்சிக்கு 222 உறுப்பினர்கள் இருப்பதால் கெவின் மெக்கார்த்தி எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் 20 பேர் கெவின் மெக்கார்த்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதனால் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. கடந்த 3 நாட்களில் 11 முறை ஓட்டெடுப்பு நடத்தியபோதும் சபாநாயகரை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால் பிரதிநிதிகள் சபை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. கெவனிக்கு 202 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் நிலையில் வெற்றி பெற இன்னும் 16 வாக்குகள் தேவை. அதே வேளையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹக்கீம் ஜெப்ரிசுக்கு வெறும் 6 வாக்குகளே தேவை. அமெரிக்காவில் கடந்த 163 ஆண்டுகளில் சபாநாயகரை தேர்வு செய்ய முடியாமல் நாடாளுமன்றத்தில் குழப்பமான சூழல் நீடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story