மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மருத்துவமனையில் அனுமதி


மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 14 Feb 2024 12:44 PM IST (Updated: 14 Feb 2024 12:55 PM IST)
t-max-icont-min-icon

நோய்த்தொற்று காரணமாக கடந்த சில வருடங்களாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் மகாதீர்.

கோலாலம்பூர்:

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது (வயது 98) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய்த்தொற்று ஏற்பட்டதால் தேசிய இதயநோய் மருத்துவமனையில் மகாதீர் சிகிச்சை பெற்று வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முதுமைசார்ந்த உடல்நல பிரச்சினைகள் மற்றும் நோய்த்தொற்று காரணமாக கடந்த சில வருடங்களாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் மகாதீர். இதய நோய் தீவிரமடைந்த நிலையில், அவருக்கு பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்டது.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், தற்போதைய துணை பிரதமர் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் மகாதீரால் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே, ஜூலை 19-ம் தேதி விசாரணையை தொடர்வதாக நீதிபதி தெரிவித்தார்.

1 More update

Next Story