அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கு கொரோனா தொற்று உறுதி

Image Courtesy: AFP
அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளின்டன் (வயது 76) கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன்(வயது 76) கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்தது, தற்போது நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தியதால் எனக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக குளிர்கால மாதங்களில் வர உள்ளதால் தடுப்பூசி செலுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பில் கிளிண்டன், கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார்.
Related Tags :
Next Story






