அனுமதி இலவசம் ... நிர்வாண நடன கிளப்புக்குள் உற்சாகமுடன் சென்ற நபருக்கு நேர்ந்த கதி


அனுமதி இலவசம் ... நிர்வாண நடன கிளப்புக்குள் உற்சாகமுடன் சென்ற நபருக்கு நேர்ந்த கதி
x
தினத்தந்தி 20 April 2023 9:24 AM GMT (Updated: 20 April 2023 9:47 AM GMT)

போலந்து நாட்டில் இலவச நுழைவு என்ற அறிவிப்பை பார்த்து, நிர்வாண நடன கிளப்புக்குள் தனது நண்பருடன் இங்கிலாந்து சுற்றுலாவாசி சென்று உள்ளார்.

கிராகோவ்,

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் போலந்து நாட்டிற்கு சுற்றுலா சென்று உள்ளார். போன இடத்தில் கிராகோவ் என்ற நகரில் நண்பருடன் சேர்ந்து மதுபானம் குடித்து உள்ளார்.

இதன்பின் புறப்பட்டு செல்லும் வழியில், நிர்வாண நடனம் ஆடும் கிளப்புகளில் ஒன்றை பார்த்து நின்று உள்ளார். அதில், இலவச நுழைவு என அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால், தனது நண்பரையும் அழைத்து கொண்டு அந்த கிளப்புக்குள் நுழைந்துள்ளார்.

அவர் ஏற்கனவே குடிபோதையில் இருந்து உள்ளார். ஆனாலும், நடன கிளப்புக்குள் சென்றதும் உற்சாகத்தில் மதுபானங்களை கொண்டு வந்து அடுக்கும்படி கூறி விட்டார். தொடர்ந்து, ஒன்றரை மணிநேரம் விடாமல் அமர்ந்தபடி மதுபானம் குடிக்க தொடங்கினார்.

இதுபோன்று அதிக ஆல்கஹால் நிரம்பிய 22 மதுபான கோப்பைகளை வாங்கி குடித்து உள்ளார். இதில், ஒரு கட்டத்தில் போதை அதிகளவில் ஏறி, மயக்கம் போட்டு விழுந்து உள்ளார். எனினும், இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்து விட்டார்.

அவருக்கு அந்த கிளப்பில் இருந்த பணியாளர்களே இன்னும் குடி என தூண்டி விட்டு, உற்சாகப்படுத்தி கொண்டு இருந்தனர் என கூறப்படுகிறது. அவர் மயங்கிய நிலையில் கிடந்தபோது, இந்திய மதிப்பில் ரூ.37 ஆயிரம் பணம் அவரிடம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி போலந்து நாட்டு காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, இரவு விடுதிகளில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம். இதுவரை 58 பேரை கைது செய்து இருக்கிறோம்.

அவர்கள் திட்டமிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள். இந்த கிளப்புகளே சில நபர்களை வைத்து கொண்டு, வாடிக்கையாளர்களை நன்றாக குடிக்கும்படி செய்து விட்டு, பின்னர் அவர்களிடம் இருந்து பணம், பொருட்களை திருடி கொள்கிறது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த இங்கிலாந்து நாட்டு சுற்றுலாவாசி ரத்தத்தில் ஆல்கஹால் சதவீதம் 0.4 என்ற அளவில் இருந்து உள்ளது. இது மரணம் விளைவிக்க கூடியது என போலந்து தேசிய வழக்கறிஞர்கள் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

போலீசார் தொடர்ந்து கூறும்போது, இந்த சம்பவத்தில் அந்நபருக்கு மருத்துவ உதவி வழங்கவில்லை. போதை அதிகரித்து, சுயநினைவை அவர் இழந்து உள்ளார். ஆல்கஹால் சேர்ந்து நஞ்சாகி மரணம் ஏற்பட்டு உள்ளது. இதனை தூண்டியதற்காக கொலை வழக்கில் சிலரை போலீசார் கைது செய்து உள்ளனர். சந்தேகத்திற்குரிய நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story