பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம்.. நாட்டின் எண்ணெய் கையிருப்பை விடுவிக்க திட்டம்


பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம்.. நாட்டின் எண்ணெய் கையிருப்பை விடுவிக்க திட்டம்
x

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிரான்சின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பாரிஸ்,

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசும், எரிபொருள் விநியோக நிறுவனமும் சேர்ந்து நுகர்வோருக்கு மானியம் அளித்தன. இதனிடையே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டதால் எரிபொருள் விநியோக பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்த சூழலில் எரிபொருள் தேவைக்கு ஏற்ப வியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 10-ந்தேதி நிலவரத்தின்படி பிரான்சில் சுமார் 2 ஆயிரம் எரிபொருள் விநியோக நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு முற்றிலுமாக தீர்ந்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிரான்சின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தட்டுப்பாடு பிரச்சினையை தவிர்த்து விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் நாட்டின் எண்ணெய் கையிருப்பை விடுவிக்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story