அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை புரட்டிப்போட்ட கனமழை


அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை புரட்டிப்போட்ட கனமழை
x

பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நியூயார்க்,

அமெரிக்காவில் கடந்த வாரம் கடுமையான பனிப்புயல் வீசியது. இதில் நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பனிப்புயலுக்கு 60-க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்றுமுன்தினம் இடைவிடாமல் மழை பெய்தது. இதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டமும் களை இழந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் பெய்த இந்த மழையானது வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு நாள் அதிக அளவாகும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் மட்டும் 5.45 அங்குலம் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.


Next Story