14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கம் - ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம்...!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கம் - ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம்...!
Published on

ரிகியவிக்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தை மையமாக கொண்டு நேற்று தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டது.

14 மணிநேரத்தில் மொத்தம் 800 நிலநடுக்கம் பதிவாகியுள்ளன. இதில் வடக்கு ஹிரிண்டவிக் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஐஸ்லாந்தில் தேசிய அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடிப்பிற்கு முன்னதாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com