ரிசர்வ் வங்கிக்கு சர்வதேச நிதியம் பாராட்டு; காரணம் என்ன?


ரிசர்வ் வங்கிக்கு சர்வதேச நிதியம் பாராட்டு; காரணம் என்ன?
x

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று சர்வதேச செலவாணி நிதியம்( ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.

பாரத ரிசர்வ் வங்கியை ஐ.எம்.எப். என்னும் சர்வதேச நிதியம் பாராட்டி உள்ளது. இதுகுறித்து ஐ.எம்.எப். நிதி மற்றும் மூலதனச்சந்தைத் துறையின் துணைப்பிரிவுத்தலைவர் கார்சியா பாஸ்குவல் முன்தினம் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறுகையில், "இந்தியாவில் பணவீக்கம் இலக்கை விட அதிகமாக போனது. இதனால் பண வீக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு ரிசர்வ் வங்கி சரியான முறையில் பணக்கொள்கையை இறுக்கியது. என் நினைவு சரியென்றால், மே மாதத்தில் இருந்து 190 அடிப்படை புள்ளிகள் விகித உயர்வை ரிசர்வ் வங்கி செய்துள்ளது. பண வீக்கத்தை இலக்குக்கு கொண்டு வருவதற்கு மேலும் இறுக்கம் தேவை என்று நாங்கள் நினைக்கிறோம்" என தெரிவித்தார்.

இதே போன்று நிதி மற்றும் மூலதனச்சந்தைத் துறையின் நிதி ஆலோசகரும், இயக்குனருமான டோபியஸ் அட்ரியன் கூறும்போது, "இந்தியாவில் பணக்கொள்கை இறுக்கமாக்கப்பட்டுள்ளது. அங்கும் பணவீக்கம் இலக்கை விட அதிகமாக உள்ளது. நிச்சயமாக பணக்கொள்கை மேலும் இறுக்கம் ஆக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார்.


Next Story