கொழும்புவில் இலங்கை பிரதமருடன் இந்திய தூதர் சந்திப்பு


கொழும்புவில் இலங்கை பிரதமருடன் இந்திய தூதர் சந்திப்பு
x

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு அதிக அளவிலான கடன் வழங்கியுள்ள நாடாக இந்தியா இருக்கிறது.

கொழும்பு,

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு அதிக அளவிலான கடன் வழங்கியுள்ள நாடாக இந்தியா இருக்கிறது. இந்த கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இலங்கை அரசுடன் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் இந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதில் முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த வாரம் முடிவடைந்து இருக்கிறது.

இந்த நிலையில் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனேவை அந்த நாட்டுக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே நேற்று கொழும்புவில் சந்தித்து பேசினார்.

அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான முதலீடுகள், பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பொது நலன் சார்ந்த இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த தகவலை இந்திய தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தது. அத்துடன் இந்த சந்திப்பு தொடர்பாக புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தது.


Next Story