அமெரிக்காவில் இந்திய வம்சாவளிக்கு கத்திக்குத்து - பின்னணி என்ன?


அமெரிக்காவில் இந்திய வம்சாவளிக்கு கத்திக்குத்து - பின்னணி என்ன?
x

கோப்புப்படம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

நியூயார்க்,

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஊபர் உணவு வினியோக ஊழியராக பணியாற்றி வந்தவர், பாரத்பாய் படேல் (வயது 36). இந்திய வம்சாவளியான இவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இந்தநிலையில், பாரத்பாய் படேல் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை நேரத்தில் நியூயார்க்கில் ரிவிங்டன் வீதி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அவரை கத்தியால் சரமாரியாக குத்தி சாய்த்தார். அவருக்கு அங்கு இருந்த யாரும் உதவ முன்வரவில்லை. அவர் தாமாகவே 911 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து அவசர கால உதவியை நாடினார். அதைத் தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

இதில் கத்திக்குத்து நடத்திய சியான் கூப்பர் (47) என்ற நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 100 முறைக்கும் மேலாக கைது செய்யப்பட்ட கிரிமினல் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரத்பாய் படேலின் மோட்டார் சைக்கிளை பறிக்கும் முயற்சியில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.


Next Story