நேபாளத்தில் சாலை விபத்து: இந்தியர் உள்பட 7 பேர் உயிரிழப்பு


நேபாளத்தில் சாலை விபத்து: இந்தியர் உள்பட 7 பேர் உயிரிழப்பு
x

Photo: PTI

நேபாளத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரு இந்தியர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

காத்மாண்டு,

நேபாள நாட்டின் பக்மதி மாகாணத்தில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். இதில் ஒருவர் இந்தியர் ஆவார். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பிர்கஞ் பகுதிக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலியான இந்தியரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த 25-வயதான அந்த இளைஞரின் பெயர் ஷரன் நாரயணம் சர்மா ஆவார். விபத்தில் உயிரிழந்த இந்தியரின் உடலை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


Next Story