தவறுதலாக சுட்டுக்கொன்ற தோழியின் உடலை எரித்த இந்தியருக்கு 7 ஆண்டு சிறை

இருவரும் கடந்த 2017-ம் ஹர்ஜோத்சிங்கின் பெற்றோர் வீட்டில் தனியாக இருந்தனர்.
டொராண்டோ,
கனடா நாட்டின் சர்ரே நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி வாலிபர் ஹர்ஜோத்சிங் தியோ (வயது 25). இவரது தோழி பவ்கிரண் தேசி. இருவரும் கடந்த 2017-ம் ஹர்ஜோத்சிங்கின் பெற்றோர் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது ஹர்ஜோத்சிங்கின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், பவ்கிரண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
அதை மறைக்கும் வகையில் பவ்கிரணின் உடலை எரிக்கும் முயற்சியில் ஹர்ஜோத்சிங் ஈடுபட்டார். ஆனால் அரைகுறையாக எரிந்த பவ்கிரணின் உடல் கைப்பற்றப்பட்டது. ஹர்ஜோத்சிங்கும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த பிரிட்டீஷ் கொலம்பியா சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, ஹர்ஜோத்சிங்குக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டார். ஆனால் இந்த தண்டனை போதுமானதல்ல என்று இறந்த பெண்ணின் உறவினர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






