இலங்கைக்கு வரும் இந்தியர்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்; இந்திய தூதரகம் அறிவுரை

இலங்கைக்கு வரும் இந்தியர்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பு,
இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அந்த நாட்டின் சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இலங்கை வரும் சர்வதேச பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பயணிகள் இலங்கை வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கு வரும் இந்தியர்கள் இலங்கையின் புதிய கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைக்கு வருகை தரும் இந்திய குடிமக்கள் சமீபத்திய கொரோனா வழிகாட்டுதல்களுக்கு இணங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






