தென் அமெரிக்க நாடான பராகுவேயில் காந்தி சிலை திறப்பு! வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு!


தென் அமெரிக்க நாடான பராகுவேயில் காந்தி சிலை திறப்பு! வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு!
x
தினத்தந்தி 22 Aug 2022 1:07 AM GMT (Updated: 22 Aug 2022 1:47 AM GMT)

பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.

அசன்சியன் [பராகுவே],

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தென் அமெரிக்காவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை அவர் திறந்து வைத்ததார்.

மந்திரி எஸ் ஜெய்சங்கர் ஆகஸ்ட் 22-27 வரை பிரேசில், பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக சென்று இருக்கிறார்.

பராகுவே தலைநகர் அசன்சியன் நகரின் முக்கிய நீர்முனையில் சிலையை அமைத்துள்ள அசன்சியன் நகராட்சியின் முடிவைப் அவர் பாராட்டினார். இந்த செயல் கொரோனா பெருந்தொற்றுநோய் காலத்தின் போது மிக வலுவாக வெளிப்படுத்தப்பட்ட ஒற்றுமையின் அறிக்கையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் பராகுவேயில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தின் வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார். அங்கு சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு பராகுவேயின் சுதந்திர போராட்ட இயக்கம் தொடங்கிய வரலாற்று சிறப்புமிக்க காசா டி லா இன்டிபென்டென்சியா பகுதியையும் அவர் பார்வையிட்டார்.


Next Story